Mangayar Malar
Sep 2010


அறிவிப்புகள்
கருத்துகள்
உங்கள் பகுதி
சமையல்
அழகு
மருத்துவம்
ஆன்மிகம்
திருமண மலர்





Designed & hosted by

 

என்.கோமதி, நெல்லை
சமீபத்தில் நீங்கள் ரசித்து, படித்த விஷயம் எது அனுஷா?
‘மணவிழா மங்கலம்’ என்ற தலைப்பிட்ட ஒரு 32 பக்கக் கையேடு! ஸ்ரீகாஞ்சி மகா பெரியவர், சுவாமி சித்பவானந்தா, வாரியார் சுவாமிகள், வேதாத்ரி மகரிஷி, ஆசார்ய ரஜனீஷ் போன்ற அருளாளர்கள் முதல் சீனாவின் யின்- யாங் தியரிவரை உள்ளடக்கிய மனையறச் செய்திகள் கொண்ட அது ஓர் வித்யாசமான திருமணப்பத்திரிகை. தனது இளைய மகள் சுப்புலக்ஷ்மியின் திருமண அழைப்பிதழாக அதைத் தயாரித்துள்ள வி.ஐ.பி யார் தெரியுமா? சுகி.சிவம்!

புஷ்பா நரசிம்மன், மும்பை - 76
சமீபத்தில் உங்கள் கணவர், உங்களுக்கு வாங்கிக் கொடுத்த பரிசு என்ன?
அது ஓர் ஆடி வெள்ளிக்கிழமை. கோயிலுக்குப் போய் விட்டு, அப்படியே அருகிலிருந்த ஒரு பிரபல வெள்ளிக் கடைக்குள் நுழைந்தோம். ஆளுயர குத்துவிளக்குகள், தட்டுகள், கிண்ணங்கள் என காணும் இடமெல்லாம் வெள்ளி டாலடித்தது. அவற்றையெல்லாம் மீறி, என் கண்ணில்பட்டது எது தெரியுமா? வெள்ளியில் செய்த பிரஷர் குக்கர்! உண்மைதான்; நம்புங்க... விலை கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்!
சும்மா... ஆர்ட் பீஸுக்காக செஞ்சு வெச்சுருக்கீங்களா?" என்று கேட்டார் என் கணவர்.
இல்லீங்க! நிஜமாகவே சமைக்கலாம். தினமும் இரண்டு பீஸ் விற்பனையாகுது!" என்றார் கடைக்காரர் கூலாக!
உடனே, என் கண்களில் ஒரு கறுப்பு நிற ரிப்பனைக்கட்டி, என் கணவர், என்னை கடைக்கு வெளியே கொண்டு வந்து விட்டார். கடையின் வாசலில் காணப்பட்ட ஒரு செய்தித்தாளில், டீ கேட்டு நச்சரித்த வயதான தாயாரை, வெட்டிக் கொன்ற மகன் கைது!" என்ற வாசகம் பளிச்சென்று கண்ணில் பட்டது. அப்படி ஓர் உலகம்... இப்படியும் ஒரு உலகம்!
சரி...உங்கள் கேள்விக்கான பதில்: பத்து கிராமில் அழகிய வெள்ளி மெட்டி + கைநிறைய செண்பகப் பூக்கள்!

மஞ்சு வாசுதேவன், மும்பை
‘எந்திரன்’ - பாடல்கள் கேட்டீங்களா...? எது சூப்பர்?

கிராமிய மெலடிக்கு மேற்கத்திய பீட்... கொண்ட ‘கிளிமாஞ்சரோ!’ பாடல் இனிப்புச் சுய்யம்! இளைய ரசனையின் மையம் மற்றவை போகப் போகப் புரியும்!

தங்கம், நங்கநல்லூர்
நாம் எதையாவது வேண்டிக் கேட்டுக்கொண்டு, பிரார்த்தனைகள் செய்யும்போது கடவுள் என்ன நினைப்பார்?

ஏண்டாம்மா லக்கேஜ் ஏத்திக்கிற?" என்று மனசுக்குள் நினைப்பார். ஆனால் எல்லாவிதமானப் பிரார்த்தனைகளுக்கும் மூன்றுவித மான விடைகளை அவர் வைத்திருப்பார் என்றே நம்புகிறேன்.
ஓ.கே!" - (உன்னோட விருப்பம் சாங்ஷன்ட்)
வெயிட்!" - (கொஞ்சம் பொறும்மா... மகளே!)
ட்ரை திஸ்!" - (உனக்காக இன்னொரு பிளான் வெச்சிருக்கேன் கண்ணம்மா!)

விசாலம் ஸ்ரீநிவாஸன், திருச்சி
பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்கிறார்களே. அதுக்கு என்ன அர்த்தம் அனுஷா?

யாராவது ஒரு வேலையை ஆரம்பிக்கும்போது, எதையோ மனசில் நினைத்து செய்ய, அதுவேறு விதமாக முடிந்தால்... இந்தப் பழமொழியைச் சொல்கிறார்கள்.
எந்த ஒரு காரியத்தைச் செய்யும்போதும், மஞ்சள் தூளில் பிள்ளையாரைப் பிடித்து வைத்து, அவரை வழிபட்டு ஆரம்பிக்கணும். காரியம் நல்லபடியாக முடிந்ததும், ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி முடிக்கணும்... என்ற விளக்கம் ஓரளவு ஓ.கேதான்!
உண்மையில் இது மகாபாரதக் கதையைக் குறிக்கும் சொற்றொடர். வியாச மகரிஷி, மகாபாரதத்தைச் சொல்லிவர, பிள்ளையார் அதை தம்முடைய கொம்பை ஒடித்துப் பிடித்து எழுதினார்.
குருகே்ஷத்திரப் போர் முடிந்ததும், அர்ச்சுனனை ரதத்தை விட்டு இறங்கும்படி ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார். அர்ச்சுனன் இறங்கியதும், ஸ்ரீ கிருஷ்ணர் இறங்கினார். அடுத்து ரதத்தின் கொடியிலிருந்த ஆஞ்சநேயர் மறைந்து விட்டார். அடுத்தநொடி, ரதம் தீப்பிடித்து எரிந்தது.
இப்படி பிள்ளையார் ஆரம்பித்து வைத்தது, ஆஞ்சநேயரால முடிந்ததாக மகாபாரதம் பற்றிய ஒரு சுவையான கதை சொல்லப்படுகிறது.

பி. கவிதா, தாம்பரம்
இப்போது விற்கும் விலைவாசியில் எதில் எதில் சிக்கனம் கடைப்பிடிக்கலாம்?

ஐம்பது காசுகள் மதிப்புள்ள அஞ்சலட்டையில், ஒரே ஒரு கேள்வியை எழுதியனுப்பியிருக்கீங்க... நாலைந்து கேள்விகள் கேட்டு... இதிலிருந்தே ஆரம்பிக்கலாம்...

கோமளா ரங்கநாதன், சென்னை
டீ.வி சீரியல்களின் ‘கிரேஸ்’ நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகின்றனவே...! அதை எப்படிக் கட்டுப்படுத்துவது அனுஷா?

பெண்கள், ராகங்கள், இயற்கை அம்சங்கள், மலர்கள் என பெயர் வைக்காமல், ‘லுங்கிக்குக் கை கொடுப்போம்!’, ‘மீசையிருக்க பயமேன்?’, ‘எங்கே சாப்பாட்டு ராமன்?’ போன்ற தலைப்புகளை வைத்தால் போதும்... டன் டனா டண்...!

லலிதா ராஜப்பா, சூளைமேடு
நடிகர்கள் தனுஷ், சூர்யா, ஜெயம் ரவி மூன்று பேருக்குமே ஆண் குழந்தைகள் பிறந்துள்ளனவே!

விடுங்க கவலைய! ரம்பா, மனீஷா கொய்ராலா, ஐஸ்வர்யா ராய் மூவருக்கும் பெண் குழந்தைகளாகப் பிறந்து இருபது வருடங்கள் கழித்து, திரையுலகில் ஜோடி சேருவாங்க! அனுஷா ஆசீர்வாதம்!

Top

முழுமையாய் வாசித்து மகிழ சந்தா செலுத்தி
கல்கி / மங்கையர் மலர் வாங்குங்கள்.

 
No comments posted.

 

Kalki, Mangayar Malar, Gokulam Tamil, Gokulam English are trademarks of:
Bharathan Publications (P) Limited.
(C) 2010, Bharathan Publication (P) Limited.
All rights reserved.
  Bharathan Publications (P) Limited.
Kalki Buildings
47NP, Jawaharlal Nehru Road, Ekkaduthangal,
Chennai, India, Pin: 600 032.
Phone: 91-44-43438888 
Fax: 91-44-
2225 1021