
ராஜா ரவிவர்மனை உங் களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். கேரள
நாட்டின் தலை சிறந்த ஓவியர். அவருடைய சித்திரங்கள் உலகெங்கும்
பிரபலமடையத் தொடங்கியதும், சில கத்துக் குட்டி ஓவியர்களுக்கு
எரிச்சல் மூண்டது. அவர்களால் ரவிவர் மனின் புகழைப் பொறுக்க முடிய
வில்லை. ரவிவர்மனின் பாணி யைப் பின்பற்றியும், சில சமயம் அவரது
ஓவியங்களை அப்படியே ஈயடிச்சான் காப்பி அடித்தும் நகல் சித்திரங்களை
உருவாக்கி விற்றுப் பிழைத்தனர். இது ராஜா ரவிவர்மனுக்குத் தெரிய
வந்தது. அவர் அலட்டிக் கொள்ளவே இல்லை. அவர் ஓர் அருமையான
சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந் தார்.
அண்டை நாட்டு
மன்னர், ஓவியப் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்தார். ஏராளமான ஓவியக்
கலைஞர்கள் திரண்டனர். குறிப் பாக ரவிவர்மனின் போட்டிக் கலைஞர்கள்
திரளாகக் கலந்து கொண்டனர்.
ஓவிய மண்டபத்தின் உள்ளே நுழைந்த
ரவிவர்மனுக்கு அதிர்ச்சி. மண்டபத்தில் இடமே இல்லை! அத்தனை பேரும்
ஆளுக்கொரு இடத்தைப் பிடித்துக் கொண்டு, ரவிவர்மனின் ஓவியங்களை
அப்படியே வரைந்து வைத்திருந்தனர். சட்டென்று சமாளித்துக் கொண்ட
ரவிவர்மன், மண்டபத்தின் மூலையில் எதையோ தீட்டிவிட்டுப்
புறப்பட்டுவிட்டார்.
சற்றுநேரம் கழித்து, மன்னர் தமது
பரிவாரத்துடன் ஓவிய மண்டபத்தைப் பார்வையிட வந்தார்.
வண்ணமயமாக வசீகரித்துக் கொண்டிருந்த எண்ணற்ற ஓவியங்களைப்
பார்வையிட்டு ரசித்துக் கொண்டே வந்தவரின் கண்களில் ஏதோ ஒன்று
இடறியது.
"யாராங்கே? இவ்வளவு அழகிய ஓவியங்களுக்கு மத்தியில்
இந்தக் கந்தல் துணி எப்படி வந்தது? உடனே அப்புறப்படுத்துங்க!"
என்று ஆணையிட்டார்.
மந்திரியும் "கரித்துணியை வீசியது யார்?
உம்!" என்று உறுமியபடியே கண்களைச் சுழற்றினார்.
பின்
பக்கத்திலிருந்த பணியாள் ஓடோடிச் சென்று, அந்தக் கந்தல் துணியை
அகற்ற முயன்ற போதுதான் தெரிந்தது.. அது கந்தல் துணி அல்ல...
ரவிவர்மன் வரைந்த ஓவியம் என்று! அவ்வளவு தத்ரூபமாய் தீட்டி
யிருந்தது அவரது தூரிகை.
முதல் பரிசும் மாலைமரியாதையும்
யாருக்குக் கிடைத்திருக்கும்?
நகல் எடுத்துப் பிழைக்கும்
ஓவியர்களின் கதி என்னவாகியிருக்கும்...? இதையெல்லாம் உங்க
யூகத்துகே விட்டுவிடுகிறேன்.
மங்கையர் மலர் தனது முப்பதாவது
ஆண்டில் `ஜாம் ஜாம்' என்று காலடி எடுத்து வைத்துள்ளது.
தனித்தன்மையும், உயிர்ப்பும், படைப்புத் திறனும் கொண்ட ரவிவர்மன்
ஓவியம் போல, தரத்திலும் நேர்மையிலும் ஆக்கத்திலும் மங்கையர் மலர்
எப்போதும் உயர்ந்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம் ரசனைமிக்க
வாசகர்களாகிய நீங்கள்தான்! `அசலு'க்கும் தரத்துக்கும் எப்போதும்
நீங்க தரும் வரவேற்புதான்!
உங்களது தொடர்ந்த
ஆதரவுக்கு நன்றி!
Top