
ஒரு பத்திரிகைப் பணிக்காக, நான் பேருந்தில் தனி ஆளாக மேற்கொண்ட
பயணம் அது. அதற்கு முன்னால் நான் புட்ட பர்த்திக்குப் போனதே இல்லை.
அவ் வளவு ஏன், நினைத்ததுகூட இல்லை.
பேருந்தில் என்னுடன்
வந்த சக பயணி "நீங்க பகவான் பாபாவோட டிவோட் டியா?" என்று கேட்டார்.
"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. சும்மா பாத்துட்டு வரலாம்னு
போறேன்" என்றேன். எனக்கு நாக்கில் சனி என்று சொல்ல வேண்டும்.
அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் அந்தச் சனி யைப்
பொங்குசனியாக்கி, என்னை பகவான் பாபா நெறிப்படுத்துவார் என்று
யாராவது சொல்லியிருந் தால் நான் அவர்களை ஒரு வழி பண்ணியிருப்பேன்.
எனக்கு அன்றைக்கிருந்த பக்குவம் அதுதான்.
பிரசாந்தி
நிலையத்துக் குள் அடியெடுத்து வைத்து, அங்கே என்னை அறிமுகப்
படுத்திக் கொண்டேன். ஏதோ ராஜமரியாதை கிடைக்கப் போகிறது என்ற
மிதப்பில் நான் தந்த அறிமுகக் கடிதங் களை, அந்த மனிதர் வாங்கி
குப்பைக்கூடையில் போட்டு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கி னார்.
"இங்கே சிபாரிசு, அறி முகம் எல்லாம் தேவையே இல்லை. சாதாரண
டிவோட் டியா வந்து பாத்துட்டுப் போய் எழுதுங்கோ" என்று அவர்
சொன்னபோது முகத்தில் அறைந்த மாதிரி உணர்ந்தேன்.
இவ்வளவு
தூரம் பயணப்பட்டு வந்து, குறைந்தபட்ச ஒத் துழைப்புக்கூடக்
கிடைக்காத இடத்தைப் பற்றி அப்படி எழுதத்தான் வேண்டுமா என் கிற
கோபம் கூட வந்தது. அதே வேகத்தில் திருவள்ளுவர் பேருந்து நிலையம்
வந்து, சென்னைக்குத் திரும்பப் பேருந்து ஏதாவது இருக்கிறதா என்று
விசாரித்தேன். இரண்டு நாட்களுக்கு புக் ஆகி விட்டது என்று, பய ணச்
சீட்டுப் பதிவாளர் சொன்னபோது என் மீதே எனக்குக் கோபம் வந்தது.
மறுபடியும் பிரசாந்தி வளாகத்துக்குள் வந்தேன். சரி வந்தது
வந்தோம். ஏதாவது விஷயம் தேறுமா என்று பார்க்கலாம் என்கிற அரை குறை
நம்பிக்கையோடு, எதிர்ப்பட்ட ஒரு பெரிய வரிடம் பாபாவைப் பற்றியும்
அந்த அமைப்பைப் பற்றியும் படு பாமரத்தனமாகச் சில கேள்விகளைக்
கேட்டபோது அவர் சிரித் தார்.
"அதோ பாருங்கோ, வைஸ்
சான்ஸ்லர் வீடு இருக்கு. இப்போ அவர் அங்கேதான் இருக்கார். போய்ப்
பாருங்கோ வேண்டியது கிடைக்கும்..." என்று ஆறுதலாகச் சொன் னார்
அவர்.
பெரியவர் கைகாட்டிய பக்கம் போனால் எல்லா வீடுகளும்
ஒரே மாதிரி யாய் இருந்தன. தயங்கியபடியே அந்த வீடு களுக்கு முன்னால்
நடப்பதைப் பார்த்து ஒருவர்,
"யாரைப் பார்க்கணும்?" என்று
கேட்டார்.
"இங்கே வைஸ் சான்ஸ்லர் வீடு எது? அவரைப் பார்க்க
முடியுமா?" என்று கேட் டேன். தும்பைப்பூ வெள்ளையில் ஒரு ஜிப்பாவும்
வேட்டியும் அணிந்திருந்த அந்த மனிதர் கையை நீட்டினார். பற்றிக்
கொண் டேன்.
"நான்தான் சம்பத். இங்கே வி.ஸி. என்ன வேணும்?"
என்று கேட்டபோது எனக்கு அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி. நிறை யத்
தகவல்களைச் சொல்லித் திக்குமுக் காடச் செய்தார். தொடர்ந்து `சனாதன
சாரதி' இதழை நடத்தி வந்த வி.கே. நரசிம்மனை யும் பார்க்கச்
சொன்னார். நானே அணுஅணுவாக அந்த வளாகத்தை அனுபவித்துப் பெற்ற
விஷயங்களும், அவர் கள் இருவரும் சொன்ன தகவல்களும் என்னுடைய
தேவைக்கு அதிகமாகவே கிடைத்தன. அவையெல்லாம், மூன்று மணி நேரத்துக்கு
முன்னால் எனக்கு ஏற்பட்ட கசப்புகளை ஒரே நொடியில் துடைத்துப்
போட்டன.
அன்று மாலை நிகழ்ச்சிகள், இரவு தங்கல், அதிகாலை
ஐந்து மணிக்குத் தொடங்கும் ஓம்கார ஜபத்தில் மண்டபத் துக்கு உள்ளேயே
போய் அமர்ந்து ஈடுபடக் கிடைத்த வாய்ப்பு, நகர சங்கீர்த்தனம் என்று
கலந்து கொண்டது பிறவிகள் பல வற்றுக்கும் நிறைவளிக்கும் அனுபவம்.
அப்போது பகவான் பாபாவை எட்ட இருந்து தரிசிக்கும்பேறும் எனக்குக்
கிடைத்தது.
மீண்டும் பேருந்து நிலையம் வந்தேன்.
பதிவுசெய்யும் இடத்திலிருந்தவர், "ஸார் இப்போதுதான் நாலு டிக்கெட்
கான்ஸ லாச்சு. மத்தியானம் இரண்டு மணி வண்டி தரவா?" என்றபோது,
எனக்கு ஒரே பிரமிப்பு!
உடனே பயணச்சீட்டை வாங்கிக் கொண்டு
ஊர் திரும்பினேன். அந்த நிகழ்வு முதல் பகவான், `யாமிருக்க பயமேன்?'
என்று என் பக்கத்தில் எப்போதும் சிரித்துக் கொண்டே நிற்கிற
மாதிரியான ஒரு பிரமை. அவரை நினைத்தால் எடுத்த காரியம் யாவிலும்
வெற்றி' என்கிற எண்ணம் அப் போதே என்னுள் உண்டானது.
