
* கி.பாலா, தாம்பரம்
பொரிச்சக் குழம்பு, பொரிச்சக்
கூட்டு ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?
பொரிச்சக்
குழம்புக்கு வேக வைத்த துவரம் பருப்பு அதிகம் போட்டு, முழு
உளுத்தம் பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல் வறுத்து, தேங்காயுடன்
அரைத்து உபயோகிக் கவும். (உதாரணம்: முருங்கைக்காய் பொரிச்ச
குழம்பு)
பொரிச்சக்
கூட்டுக்கு, காய் அதிகம் போட்டு, குழம்புக்கு அரைத்து விடுவதை
விடச் சற்று அதிகமாகத் தேங்காய்ச் சேர்த்து அரைத்து
உபயோகிக்கவும். (உதாரணம்: பூசணிக்காய் பொரிச்ச கூட்டு)
பொரிச்சக் குழம்பை சாதத்துடன் கலந்து சாப்பிடுவதும், பொரிச்சக்
கூட்டை சாதத்துக்குத் தொட்டுக் கொண்டு சாப்பிடு வதும் வழக்கம்.
* மைதிலி ராதாகிருஷ்ணன்,சென்னை.
வெஜிடபிள்
பிரியாணிக்கும், ஃப்ரைட் ரைஸுக்கும் என்ன வித்தியாசம்?
பிரியாணிக்கு, காய்களோடு மசாலாக் கள் மற்றும் களைந்த
பச்சரிசியைப் போட்டு தண்ணீரும், தேங்காய்ப்பாலும் ஊற்றி
நேரிடையாக குக்கரில் செய்வது வழக்கம். ஃப்ரைட் ரைஸுக்கு சற்றே
பெரிய தீயில் க்விக்காக ‘டாஸ்’ (தூக்கிப் போட்டு) செய்து இலேசாக
வதக்கிய காய்கள், சாஸுகள், வெள்ளை மிளகுத் தூள், அஜினோ மோட்டோ
போன்ற வற்றுடன் உதிரி உதிரி யாக வடித்த பாசுமதி அரிசி சாதத்தைச்
சேர்த்து ஃப்ரை செய்வோம்.
பிரியாணிக்கு தக்காளி, உருளைக்
கிழங்கு, மஞ்சள் தூள், தனியாத் தூள், கசகசா கண்டிப்பாகச்
சேர்ப்போம். ஃப்ரைட் ரைஸுக்கு கோஸ், குடை மிள காய், சோயா சாஸ்,
வினிகர் மஸ்ட்!
பிரியாணிக்கு கொத்துமல்லித் தழை யைத் தூவி
அலங்கரிப்பது போல், ஃப்ரைட் ரைஸுக்கு வெங்காயத்தாள் தூவி
அலங்கரிக்க வேண்டும்.
* ராஜம், காரைக்கால்
(முகவரி தேவை. பரிசு அனுப்புவதற்கு!)
கைவசம் தயிர்
இருக்கும்போது, திடீர் விருந்தாளி வந்தால் அவசர மோர்க் குழம்பு
எப்படிச் செய்வது? அதற்குரிய பொருள்களை அரைக்க நேரம் இல்லாத
போது, கலப்பதற்கு பொடியாகத் தயாரித்து உபயோகிப்பது எப்படி?
சிறிது கடலை மாவை பச்சை வாசனை போக எண்ணெயில் வறுத்து தயிருடன்
நன்கு கலக்கவும். இதனுடன் வேகவிட்ட காய் மற்றும் பச்சை சீரகம்
சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். பச்சையாக சிறிது தேங்காய்
எண்ணெய் விட்டு கறிவேப் பிலை தூவவும்.
திடீர் மோர்க்குழம்பு பொடிக்கு:
கொப்பரைத் தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய் வற்றல்,
கறிவேப்பிலை இவற்றை வெறும் வாணயில் புரட்டவும். இதனுடன் காய்ந்த
இஞ்சி, சீரகம் சேர்த்து பொடித்து, ஒரு ‘ஏர்-டைட்’ டப்பாவில்
போட்டு ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.
ஒரு கப் கெட்டியான மோர் அல்லது
தயிருக்கு இரண்டு டேபிள் ஸ்பூன் விகி தத்தில் இந்தப் பொடியைக்
கரைத்துக் கொள்ளவும். தேங்காய் எண்ணெயில் கடுகு தாளித்து,
சுலபமாகவும், வேகமா கவும் நறுக்கக்கூடிய வெண்டைக் காய் போன்ற
காய் போட்டு வதக்கவும். கரைத்துக் வைத் துள்ள மோர்க் கலவை, உப்பு
சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கினால் திடீர் மோர்க்குழம்பு ‘கமகம’
என்று போடு போடும்!
* உஷா வாசுதேவன், சித்தூர்
சர்க்கரைப் பாகுபதம் பற்றிக் கொஞ் சம் விவரமாக
விளக்கம் தரவும்.
பாகுபதம் பற்றி கொஞ்சம் இல்லை,
நிறையவே விவரமான விளக்கம் தேவை. கொஞ்சம் அசந்தாலும் பரமபத விளை
யாட்டு போல காலை வாரி விட்டு விடும்.
பிசுக்குப் பதம்: சர்க் கரையை சற்றுத் தாராள மாக
தண்ணீர் சேர்த்துக் காய்ச்சவும். சர்க்கரை கரைந்து வரும் நீர்ப்
பாகு பதமானது கையால் தொட்டால் ‘பிசுக் பிசுக்’கென்று கையில்
ஒட்டும். (உதார ணம் : குலோப் ஜாமூன்)
அரை கம்பிப்பதம்:
பிசுக்குப் பதம் வந்த பிறகும் சற்று அதிக நேரம் கொதிக்க விட்டுக்
கையால் தொட் டால், கட்டை விரலுக் கும், ஆட்காட்டி விரலுக்கும்
நடுவே ஒரு கம்பி உருவாகி உடை வதுதான் அரை கம்பிப் பாகுப்பதம்
அல்லது இளம் பாகுபதம். (உதார ணம் : பாதுஷா)
ஒரு கம்பிப் பதம்:
அரை கம்பிப் பதம் வந்த பிறகும் கொதிக்கவிட்டு, தொட்டால் கட்டை
விரலுக்கும் ஆட்காட்டி விரலுக் கும் நடுவே ஒரு கம்பி உருவாகி அது
உடையாமல் ஒரு நூல் அல்லது கம்பிபோல் நிற் பதுதான் ஒரு கம்பிப்
பதம். (உதாரணம்: மைதா பர்ஃபி)
இரண்டு கம்பிப் பதம்: ஒரு
கம்பிப் பதம் வந்த பின்னர் மேலும் கொதித்து, தொட்டால் கட்டை
விரலுக்கும், ஆட்காட்டி விரலுக்கும் நடுவே இரண்டு கம்பி உருவாகி
உடையாமல் நிற்பதுதான் இரண்டு கம்பிப் பதம். (உதாரணம்: முந்திரி
பர்ஃபி)
* மு.சுலைஹா உம்மாள்,கீழக்கரை.
மைக்ரோவேவ் அவனில் கிரிஸ்ப்பா குக்கீஸ், பிஸ் கெட்ஸ் செய்ய
முடியுமா?
‘கன்வெக்ஷன்’ அல்லது ‘பேகிங்’ மோடுடன்
கூடிய மைக்ரோவேவ் அவனில் கிரிஸ்பியான குக்கீஸ், பிஸ் கெட் செய்ய
முடியும்.
நாம் நம்
வீட்டில் உப யோகிக்கும் எண்ணெய், மைதா, கோதுமை அல்லது ராகிமாவு
உபயோகித்து செய்ய லாம். உதாரணத்துக்கு, ‘குட்டீ ஸு’க்கு மிக மிக
ஸ்வீட் டாக - வயதானவர்களுக்கு சாஃப்ட்டாக, சிறிது குறைந்த
இனிப்புடன் சுகாதாரமாக, சுவையாக செய்யலாம். மைக் ரோவேவ் அவனில்
‘கன்வெக் ஷன் மோடில்’ குறைந்த செலவில் பிஸ்கெட்டுகள் செய்ய
முடியும் என்பது கூடுத லான லாபம்!
(முற்றும்)
