
உணவே மருந்து. மருந்தே உணவு என்பது சித்த மருத்துவக்
கொள்கையாகும். நாம் சாப்பிடு கின்ற உணவின் தூய்மை, அளவு, தன்மை,
உணவு சமைக்கப்படும் பக்குவம் ஆகியவற்றைப் பொறுத்தே நம் உடல்நலமும்,
மனநலமும் உணர்ச்சிகளின் வெளிப்பாடும் அமைகின்றன. உடல் நோயின்றி
நலமாக இருப்ப தற்கு மனநலம் முதற்காரணம் என்கிறது சித்த மருத்துவம்.
மன அழுத்தமும், மனச் சோர்வும் தலை வலிக்கும், செரிமானக் கோளாறு
களுக்கும், நரம்பு மண்டலத்தின் பாதிப்புக்கும் காரணம் என்பது
தற்கால மருத்துவ உலகம் ஒப்புக் கொள்கிற செய்தியாகும்.
மருந்தே உணவு என்கிறபோது, சித்த மருத்துவத்தில் `பத்தியம்' என்று
ஒரு வார்த்தை ஏன் சொல் லப்படுகிறது என்று நாம் சிந்திக்க வேண்டும்.
இந்தப் பத்தியத்துக்கு பயந்து போய் நம்மில் பல பேர் சித்த
மருத்துவமே வேண்டாம் என்று நினைப்பதுண்டு. இதில் பயப்பட ஒன்றும்
இல்லை. நாம் சாப்பிடும் உணவுப் பொருள்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு
தன்மை கொண்டவை. எந்தக் கார ணத்தால் நமக்கு நோய் வந்துள் ளதோ,
அந்தக் காரணத்தை நீக்க மருந்து தரப்படுகிறது.
மருந்து
சாப்பிடும்போது நாம் சாப்பிடும் உணவு அதே காரணத் தைத் தூண்டும்
பொருளாக அமைந்துவிடக் கூடாது. அப்படி அமையும்போது எதிர் விளைவுகள்
ஏற்படும். மருந்து பயன் தராமல் போய்விடும். எடுத்துக்காட்டாக
செரிமான உறுப்புகள் சரியாக வேலை செய்யவில்லை. பசியே இல்லை என்று
சித்த மருத்துவரி டம் நாம் சொல்லும்போது, நமக்கு செரிமான
உறுப்புகளின் செயல் திறனை சரிப்படுத்தும் மருந்துகளை அவர்
தருகிறார் என்றால் மாமிசம், கொழுப்பு, காரம் நிறைந்த உணவுப்
பொருள்களை விலக்கச் சொல்லுவார். இதுதான் பத்தியம். ஏற்கனவே
பழுதடைந்த உறுப்புக் களை சரி செய்து கொண்டிருக் கும்போதே, அதிகமாக
அவற்றை வேலை செய்ய வைப்பது என்பது தவறல்லவா?
ஓர் இயந்திரம்
பழுதுபட்டுப் போய்விட்டது. பழுதான இடத் தைக் கண்டுபிடித்து சரி
செய்ய முயற்சி செய்யப்படுகிறது. அப் போது அந்த இயந்திரம்
நிறுத்தப்பட வேண்டும். இயந்திரமும் அதிகமாக வேலை செய்ய வேண்டும்;
அதே சமயத்தில் பழுது பார்க்கவும் வேண்டுமென்பது நடக்காத காரியம்.
இதைப்போலத்தான் நம் உடலும், பத்தியம் என்பது. மருந்து விரைவாக
முழுமையாக வேலை செய்ய வேண்டும் என்பதற்காக சொல்லப்படும் வழி
முறைகள். இதைக் கடைப்பிடித்தால் நமக்கு நல்லது.
சித்த
மருத்துவத்தில் உட் கொள்ளும் மருந்துகளோடு காந்த சிகிச்சை, யோகாசன
பயிற்சிகள், நீர் மருத்துவம், இயற்கை மருத்து வம், வாழும் முறை
ஆகியவையும் சேர்த்தே அளிக்கப்படுகின்றன. ச்ஞ்ணஞுணாணி ணாடஞுணூச்ணீதூ
என்று தற்காலத் தில் கூறப்படும் காந்த சிகிச்சையை, தேரையரின்
பாடலில் காணமுடி கிறது. ஆரம்ப நிலையிலுள்ள கழுத் துப் பிடிப்பு,
முதுகுவலி, கைகால் மூட்டு வலி ஆகியவற்றுக்கு யோகா சனப் பயிற்சிகள்
மட்டுமே சித்த மருத்துவர்களால் பரிந்துரைக்கப் படுகின்றன.
மருந்துப் பொருள்களைச் சேர்த்து, பொடியாக்கி, பக்குவம் செய்து,
அவற்றை மரப்பட்டை களால் ஆன தணல் குழியில் இட வேண்டும். நோயாளியை
போர்வை கொண்டு போர்த்தி, (அதிலிருந்து கிளம்பும் புகையினை) உடல்
முழு வதும் படுமாறு செய்து சருமத்தி லிருந்த நச்சுக்களை அகற்றி,
சரும நோய்களைக் குணப்படுத்தும் `பாடாணப் புகை சிகிச்சை முறை' சித்த
மருத்துவத்துக்கே உரியது.
