Mangayar Malar
Sep 2010


அறிவிப்புகள்
கருத்துகள்
உங்கள் பகுதி
சமையல்
அழகு
மருத்துவம்
ஆன்மிகம்
திருமண மலர்





Designed & hosted by

 

செய்முறை:

கத்தரிக்காயை அடுப்பின் தணலில் நேரடியாகச் சுடவும். எல்லாப் பக்கமும் கத்தரிக்காயைத் திருப்பிவிட்டு நன்றாகச் சுட்டு, தோலு ரித்து மசிக்கவும். இதில் கடைந்த தயிர், உப்பு, கொத்து மல்லித் தழை சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு பொரிந்ததும், உளுத்தம் பருப்பு, வர மிளகாய் பச்சை மிளகாய் கிள்ளி போடவும். உளுத்தம் பருப்பு சிவந்ததும் கறிவேப்பிலை போட்டு இறக்கி பச்சடியில் தாளித்ததைச் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கருவடகம் போட்டுச் சிவந்ததும் பச்சடியில் போட்டுக் கலக்கி விடவும். இது ஒரு ‘சைட் டிஷ்’. சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். (மோர்க் குழம்பு மாதிரி)

செய்முறை:
நேந்திரங்காயைத் தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். நறுக்கிய துண்டுகளைத் தேவையான தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள் போட்டு (முக்கால் வேக்காடு) வேக வைக்கவும்.
தேங்காய்த் துருவல், குறுமிளகு, தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும்.
வேக வைத்த நேந்திரங்காயைத் தயிரில் கலக்கி, அடுப்பில் வைத்து கலக்கிக்கொண்டே இருக்கவும். தயிர் பிரியாமல் இருக்க, கலக்கிக் கொண்டே சுண்ட வைக்கவும்.
பிறகு காய் வெந்தபின் இறக்கி பின் தேங்காய் எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
குறிப்பு: தயிர் பிரியாமல் இருக்க, கலக்கிக் கொண்டே இருக்கவும். குழம்பு கெட்டியான பின்பு, பூத்து வரும்போது இறக்கி, பிறகு தாளிக்கவும்.

தேவையான பொருள்கள்:
பெரிய கத்தரிக்காய் - 2,
புளிப்பில்லாத தயிர் - 1
அல்லது 2 கப், உப்பு -
தேவைக்கு, பச்சை மிளகாய் - 1
தாளிக்க
எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு - தலா லீ டீ ஸ்பூன், வரமிளகாய் - 1, கருவடகம் - சிறிது, கொத்துமல்லித் தழை, கறிவேப்பிலை - சிறிது

முழுமையாய் வாசித்து மகிழ சந்தா செலுத்தி
கல்கி / மங்கையர் மலர் வாங்குங்கள்.

 
No comments posted.

 

Kalki, Mangayar Malar, Gokulam Tamil, Gokulam English are trademarks of:
Bharathan Publications (P) Limited.
(C) 2010, Bharathan Publication (P) Limited.
All rights reserved.
  Bharathan Publications (P) Limited.
Kalki Buildings
47NP, Jawaharlal Nehru Road, Ekkaduthangal,
Chennai, India, Pin: 600 032.
Phone: 91-44-43438888 
Fax: 91-44-
2225 1021