Mangayar Malar
Sep 2010


அறிவிப்புகள்
கருத்துகள்
உங்கள் பகுதி
சமையல்
அழகு
மருத்துவம்
ஆன்மிகம்
திருமண மலர்





Designed & hosted by

 

இந்த ஆதிநாதர் இங்கே கோயில் கொண்ட வரலாறு மிகவும் சுவையானது.

சோழ மன்னர்களின் புராதன மான தலைநகரம் உறையூர் என்பது அனை வரும் அறிந்த விஷயம். உறையூருக்கு மேற்கே அமைந்துள்ள தற்போதைய வயலூர் பகுதி பெரிய காடாக இருந்தது.

அப்பொழுது காட்டு விலங்குகளால் பயிர்களுக்கும், மக்களுக்கும் துன்பம் ஏற்பட்டது. மக்களைக் காக்க மன்னன் விலங்குகளை வேட்டையாடினான். களைத்துப் போனான். சுற்றும் முற்றும் பார்த்தான். நன்றாக விளைந்த கரும்பு இருந்தது. அது மூன்று கிளைகளாகப் பிரிந்திருந்ததை மன்னன் கவனிக்க வில்லை.

நீர் வேட்கையால் அவசரமாகக் கரும்பை ஒடித்து, வாயில் வைத்துக் கடித்தான். கரும்புச் சாறல்லவா வர வேண்டும்? மாறாக இரத்தம் வழிந்தது. இதைக் கண்ட மன்னன் அலறினான். காவலர்களை அழைத்து கரும்பு வளர்ந்த இடத்தின் அடியில் தோண்டச் செய்தான்.

சிவலிங்கம் இருப்பதைக் கண்டான். முக்கிளையின் அடியில் முக்கண்ணன் இருப்பதைத் தாம் கவனிக்காமல் போனதை எண்ணி வருந்தினான். உடனே அங்கேயே ஆலயம் அமைக்க ஏற்பாடு செய்தான். இவர்தான் அக்னீஸ்வரர்.

அக்னீஸ்வரர் சன்னிதியைச் சுற்றியே பிராகாரம் செல்கிறது. இங்கு ஒரே ஒரு பிராகாரம்தான். அம்மையப்பரை வணங்கிய பின்னரே முருகனை வழிபட வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவது போல் அமைந்துள்ளது.அம்மையப்பருக்குப் பின்னால் குமாரப் பெருமான், தேவிகளுடன் கோயில் கொண்டுள்ளார். இது ஏன்?

உலகிற்கெல்லாம் ஓதுவிக்கிற சிவபெருமானையே சீடனாக வைத்து உபதே சித்தவர் குமாரப் பெருமான், ஞான பண்டித ஸ்வாமி என்றாலும் தந்தையையே சீடனாக வைத்து உபதேசித்து விட்டோமே என்ற பழி தீர, அம்மையப்பரை வழிபட நினைத்து இத்தலத்துக்கு வந்தார்.

வேலாயுதத்தினால் தீர்த்தம் உண்டாக்கி தாய் - தந்தையரைக் கும்பிட்டார். இதன் காரணமாகவே முருக பக்தர்கள் இத்தலத்தை ‘குமார வயலூர்’ என்று அழைக்கிறார்கள்.

வயலூர் அருள் மிகு சுப்ரமண்ய ஸ்வாமி ஒரு முகத்துடன் நான்கு திருக்கரங்களுடன் வள்ளி - தெய்வயானை சமேதராகத் தரிசனம் தரு கிறார். மயில் வாகனம் தெய்வயானை யின் பக்கமாகத் திரும்பியுள்ளது ஒரு சிறப்பான அம்சம்.

சித்தர்கள் தேடி வந்து முக்தியடையும் இடம் வயலூர் முருகன் சன்னிதி. சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்று சுடர்களும் இத்தல முருகனை வழிபட்டு பேறுகள் பெற்றதாக அருணகிரி நாதர் கூறுகிறார்.

ஆலயங்களில் குடி கொண்டிருக் கும் ஆண்டவனைத் தேடி பக்தர்கள் போவதுதான் வழக்கம். ஆனால் அடிய வரை ஆண்டவனே தன் கோயிலுக்கு ‘வா’வென்று அழைத்தது அற்புதச் செயல் அல்லவா! தனது புது அடியவரான அருணகிரிநாதரை வயலூர் ஆண்டவன் அழைத்து அற்புதம் நிகழ்த்தினான்.

அருணகிரிநாத பெருமானுக்குத் திருவண்ணாமலையில் முருகன் ‘முத்தைத் தரு’ என்று திருப்புகழுக்கு அடி எடுத்துக் கொடுத்ததும், அருணகிரி நாதர் பாடி முடித்தார். முருகபெருமான், அருணகிரி நாதரின் முன்பு மீண்டும்தோன்றினார்.

அருணகிரி, ஏன் இன்னும் திருப்புகழ் பாடவில்லை?" என்று கேட்டார்.

திருப்புகழ் என்பது ஒரு பாடல் மட்டுமில்லை. பல பாடல்கள் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை. இதை அச்சமயம் அருணகிரிநாதர் அறியவில்லை.

தாங்கள் அடி எடுத்துக் கொடுத்ததும் பாடிவிட்டேன். மேலும் பாடும் தன்மையை அறியேன் ஐயனே" என்றார்.

அன்றிரவே கந்த பெருமான் கனவில் வந்து, அருணகிரி, வயலூர் வா" என்று பணித்தார்.

அருணகிரிநாதர் வயலூர் வந்தார். பொய்யா கணபதி முன்பு மீண்டும் திருப்புகழ் பாடல் மலர்ந்தது. வக்கரை விசித்ரமணி" என்ற திருப்புகழில் -

செய்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பென எனக்கருள்கை மறவேனே" என்று தெரிவிக்கிறார்.

‘கைத்தல நின்றகனி’ என்ற விநாயகர் துதித் திருப்புகழ் பொய்யா கணபதியை வைத்து முதலில் பாடப் பெற்றது. இதன் பின்னரே அருணகிரி நாதர் மேலே நிறையத் திருப்புகழ் பாடல்களைப் பாடி யுள்ளார்.

திருப்புகழில் அக்னீஸ்வரரையும், பொய்யாகணபதியையும் -
அருளிள் சீர்பொ யாத கணபதி
திருவக் கீசன் வாழும் வயலியினழகுக் கோயில் மீதில் மருவிய பெருமாளே" என்று குறிப்பிட்டுள்ளார்.

வயலூர் உற்சவர் பெயர் முத்துக் குமார ஸ்வாமி. இவர் மிகவும் அழகும், கலை நயமும் கொண்டவர்.

இத் தலத்து நவக்கிரக சன்னிதியில் ஸ்ரீ சூரியன், தனது தேவியர் உஷாதேவி, சாயாதேவியுடன் மேற்கு நோக்கிக் காணப்படுகிறார். மற்ற எட்டு கிரகங்களும் சூரிய மூர்த்தியை நோக்கியுள்ளனர். நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்ய வேண்டி வருகிறார்கள்.

திருமண தோஷம் அகல முருகனுக்கு வள்ளி - தெய்வயானையுடன் திருக்கல்யாணம் செய்து வைக்கிறார்கள். இங்குள்ள தீர்த்தம் பிணி தீர்க்கும் சக்தியுடையது. இதன் வடபாகத்தில் உள்ள இரும்பினால் செய்யப்பட்டுள்ள குமரவேலுக்கு ஆராதனை செய்கிறார்கள்.

ஆறு கால பூஜை தினமும் நடை பெறுகிறது. காலை ஆறு மணி முதல் மதியம் 1 மணிவரையில் மாலை 3.30 மணி முதல் இரவு 9 மணி வரை சன்னிதி திறந்திருக்கும்.

முழுமையாய் வாசித்து மகிழ சந்தா செலுத்தி
கல்கி / மங்கையர் மலர் வாங்குங்கள்.

 
No comments posted.

 

Kalki, Mangayar Malar, Gokulam Tamil, Gokulam English are trademarks of:
Bharathan Publications (P) Limited.
(C) 2010, Bharathan Publication (P) Limited.
All rights reserved.
  Bharathan Publications (P) Limited.
Kalki Buildings
47NP, Jawaharlal Nehru Road, Ekkaduthangal,
Chennai, India, Pin: 600 032.
Phone: 91-44-43438888 
Fax: 91-44-
2225 1021