
அந்தக் காலத்தில் எடுத்த படங்கள் எல்லாம் குடும்பக் கதைகள்தான்.
முகத்தில் மெச்சூரிட்டி கொண்ட கொஞ் சம் வயசான நடிகைகளைத்தான்
ஹீரோயி னாப் போடுவாங்க. பதினாறு, பதினேழு வயசில் என் முகத்தில்
குழந்தைத்தனம் தான் அதிகமா இருந்தது. அதனால, குடும்பக் கதைப்
படங்களின் ஹீரோயி னாக நடிக்க எனக்கு வயசு போதாதுன்னு
தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் நினைச்சாங்க. எனக்கு அதிகமா
வாய்ப்பு வராம இருந்ததுக்கு இதுவும் ஒரு காரணம்.
என்னோட
குடும்பத்துல நான் முக்கியமான பிரட் வின்னர் ஆச்சே! அதனால நடிக்காம
வீட்டுல சும்மா உட்கார்ந்துக்கிட்டு இருக்க முடியுமா? சினிமா
உலகின் முக்கியமானவங்களைப் போய் பார்த்து, வாய்ப்பு கேட்கும்படி
எங்க குடும்பத்துக்கு வேண்டிய சிலபேர் எனக்கு அட்வைஸ் பண்ணிணாங்க.
எங் களுக்கும் அது சரின்னுபட்டது. எனக்கு ஒரு அட்வான்டேஜ்
என்னன்னா, சினிமா உலகத்துல முக்கியமானவங்க எல்லாருக் கும் என்னை
ஒரு குழந்தை நட்சத்திரமா ரொம்ப நல்லாவே தெரியும். அதனால, அவங்களைப்
போய் பார்க்கிறது சிரமமா இல்லை.
என்னுடைய பாட்டியும்
நானுமா சிவாஜி அண்ணன் வீட்டுக்குப் போனோம். அன்போடு என்னைப் பற்றி
விசாரித்தார். அவர் நடிக்க இருந்த `அன்னை இல்லம்' படத்தில்
முத்துராமனுக்கு ஜோடியாக நடிக்க, எனக்கு வாய்ப்பு கிடைச்சது.
இன்னொரு நாள் ராமாவரம் தோட்டத் துக்குப் பாட்டியுடன் போய்
எம்.ஜி. ஆரைப் பார்த்தோம். அன்போடு உப சரித்த எம்.ஜி.ஆர்.
"சச்சுவின் பர்ச னாலிட்டி ரொம்ப சின்னப் பெண் போல இருக்கு. அதனால
இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணட்டும்" என்று சொன்னார். உடனே, நான்
பட்டென்று அங்கேயிருந்து புறப்பட்டு, காரில் வந்து உட்கார்ந்து
விட்டேன். `சின்னப் பொண்ணுன்னா, ஹீரோயின் ரோல் இல்லாவிட்டாலும்,
ஒரு செகண்டு ஹீரோயின், தங்கை ரோலுக் காவது சிபாரிசு
செய்யலாமில்லையா? அதை விட்டுட்டு, வெயிட் பண்ண சொல்லிட்டாரே!'
என்று எனக்குள்ளே ஒரே குமுறல்.
`அன்னை இல்லம்' படத்தில்
நான் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில், திடீரென்று ஒரு நாள்
டைரக்டர் ஷ்ரீதரின் அலுவலகத் திலிருந்து அழைப்பு வந்தது. சித்ராலயா
ஆஃபீசுக்குப் பாட்டியுடன் போனேன். "யூத்ஃபுல்லான ஒரு கதையை
டைரக்டர் ஷ்ரீதர், ஈஸ்ட்மென் கலரில் படமாக எடுக்கப் போகிறார்.
படத்தில் காஞ்சனா, ராஜஷ்ரீ, நீங்க மூணு பேர் ஹீரோ யின்கள்" என்று
சித்ராலயா கோபு சொன்னதும் எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஆனால்
பாட்டி, "இவளுக்கு என்ன ரோல்?" என்று பட் டென்று கேட்டார்.
`நாகேஷுக்கு ஜோடி சச்சு" என்று கோபு சொன்ன மறு வினாடியே, "ஓ!
காமெடி ரோலா? இப்போதானே இவ, ஹீரோயினா அறிமுகமாகி யிருக்கா? இப்போ
போய் காமெடி ரோல் பண்ணச் சொல்றீங்களே?" என்று கேட்டார்.
ஆனால் கோபு, "நாகேஷுக்கு ஜோடின்னு நீங்க பார்க்காதீங்க! படத் தோட
மூணு ஹீரோயின்ஸ்ல சச்சுவும் ஒரு ஹீரோயின். அவருக்கு நாகேஷோட
சேர்ந்து காமெடி பண்ற மாதிரியான கேரக்டர் இல்லை; மத்த ரெண்டு
ஹீரோயின்கள் மாதிரியே முக்கிய மான கேரக்டர்தான்! சச்சு நல்ல
டான்ஸர்; படத்துல அவருக்கு மாடர்ன் டிவிஸ்ட் டான்ஸ் எல்லாம்
இருக்கு; கதைல சினிமா டைரக்டரான நாகேஷ், சச்சுவை சினிமா ஹீரோயினாக
அறிமுகம் செய்ய நினைக் கிறாரு. நல்ல ரோல். மறுக்காம ஒப்புக் கோங்க"
என்று வற்புறுத்தினாலும், என் பாட்டி கன்வின்ஸ் ஆகலை.
"வீட்டுக்குப் போய் யோசிச்சு சொல்லறோம்; எங் களுக்கு ரெண்டு நாள்
டைம் கொடுங்க" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிட் டார்.
ஈஸ்ட்மென் கலர், டிவிஸ்ட் டான்ஸ் எல்லாம் என்னை ரொம்பவே ஈர்த்தன.
ஆனால், காமெடி ரோல் வேணாம் என்பது பாட்டியின் கருத்து. கடைசியில்
`காதலிக்க நேரமில்லை' படத் தில் நான் நடித்தற்கு முக்கியமான கார
ணமே கோபுதான். அவர்தான் என் பாட்டி யிடம் ரொம்ப நேரம் பேசி
சம்மதிக்க செய்தார்.
`காதலிக்க நேரமில்லை' படத்தில் எனக்கு
ஒரு ஹீரோயினுக்குரிய முக்கியத் துவம் கிடைத்தது எத்தனை உண்மையோ அதே
அளவுக்கு, அந்தப் படத்தின் மூல மாக என் மீது காமெடி முத்திரை
பலமாகக் குத்தப்பட்டது என்பதும் உண்மை. அடுத்து ஷ்ரீதர் எடுத்த
`ஊட்டி வரை உறவு' படத்திலும் எனக்கு ஏறத்தாழ அதே மாதிரி யான
ரோல்தான்.
எனக்குள்ளே, `நான் காமெடி ரோல் களை
ஒப்புக்கொள்ளாமல் இருந்திருக்க லாமோ?' என்ற எண்ணம் ஏற்பட்டது.
காரணம், எனக்கு அதன் பிறகு வந்த வாய்ப்புகள் எல்லாமே, காமெடியாகவே
இருந்தன. ஒரு சிலர் என்னிடம். "சச்சு! உனக்கு ஒரு ஹீரோயினுக்குரிய
முக லட் சணம், நிறம் எல்லாம் இருக்கு. நீ காமெடி ரோலில் நடித்தது
தப்பு!" என்று சொன் னார்கள்.
மீண்டும் எனக்கு குழப்பம்.
இனி மேல் காமெடி ரோலில் நடிக்கக் கூப்பிட் டால் வேணாம் என்று
மறுத்து விட லாமா? ஹீரோயின் வாய்ப்பு வரும்வரை அவசரப்படாமல்
பெறுமையாக காத்திருக் கலாமா? என்று நினைத்தேன். இன்னொரு பக்கம்,
என் குடும்பச் சூழ்நிலை, நான் நடிக்காமல் நல்ல வாய்ப்புக்காகக்
காத்தி ருப்பதற்கு அனுமதிக்கவில்லை. கடைசி யில், பாட்டி, அக்கா
மற்றும் குடும்பத்தில் மற்ற மூத்தவர்கள் அனைவருமாக ஆலோ சனை செய்து
என்ன ஆனாலும் சரி, நடிக்க வாய்ப்பளித்து, திறமையை நிரூபிக்க
வாய்ப்புள்ள ரோல்கள் எதுவானாலும் தயங்காமல் ஏற்று நடிப்பது என்ற
தீர்மானத் துக்கு வந்தோம்.
`காதலிக்க நேரமில்லை'
படத்துக்குப் பிறகு எனக்கு வாய்ப்புகள் ஏராளமாக வந் தன. அப்போது
எனக்கு ஆறுதலும், திருப்தியும் அளித்த விஷயம் அந்தக் காலத் துப்
படங்களில், காமெடி ஜோடிக்கும் நல்ல முக்கியத்துவம் தந்ததுதான்.
ஹீரோ- ஹீரோயினுக்குத் தருவது போல காமெடி ஜோடிக்கும் கண்டிப்பாக ஒரு
பாட்டு, டான்ஸ் இருக்கும். நன்றாக டான்ஸ் ஆடத் தெரிந்து, மேடையில்
நடன நிகழ்ச்சி களைக் கொடுத்துக் கொண்டிருந்த நான் நடிக்கும்போது,
காமெடி ஜோடிக்கு கடின மான ஸ்டெப்ஸ் மற்றும் மூவ்மெண்ட்ஸ் கொண்ட
நல்ல டான்ஸ் கம்போஸ் செய்த பாடல்களைக் கொடுத்தார்கள்.
சூப்பர் டான்ஸரான நாகேஷும், நானும் நடிக்கும் படம் என்றால் கண்டிப்
பாக எங்களுக்கு ஒரு டான்ஸ் பாட்டு உண்டு. அதனால், காமெடி ரோல்களில்
நடித்தாலும் எனக்கு நடிப்புத் திறமையை யும், டான்ஸ் திறமையையும்
வெளிப் படுத்த நிறைய வாய்ப்புகள் கிடைத்தன.
நாகேஷின்
நடிப்பில் எப்போதுமே ஒரு துறுதுறுப்பும், சுறுசுறுப்பும்
இருக்கும். அதனால் அவரோடு நடிக்கிறபோது, நான் ரொம்பவும்
ஜாக்கிரதையாக, இருப் பேன். நாகேஷ், ஒத்திகையின்போது, டைரக்டர்
சொல்வதைக் கேட்டு அதன்படி வசனம் பேசி, நடிப்பார். டேக் எடுக்கும்
போது தானாகவே சில விஷயங்களை சேர்த்துக் கொண்டோ அல்லது உடல் அசைவின்
மூலமோ எதிரே இருப்பவரை, தூக்கிச் சாப்பிட்டுவிடுவார். அதனால்
அவருடன் நடிக்கும்போது அதிக டைம் சென்ஸ்சுடன் நடிப்பேன்.
ஜெமினி தயாரித்த `ஔவையார்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த
நான், குமரியாகி மீண்டும் ஜெமினி தயாரித்த `மோட்டார் சுந்தரம்
பிள்ளை' படத்தில் நடித்தது ஒரு மறக்க முடியாத அனுபவம்.
(அச்சு வெல்லம் இனிக்கும்)