
சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் என்று தணியும் எப்படித்
தணியும் என்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஒரு புறம்
புலம்ப, ‘பன்னி ரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வரும்,
நல்ல மதிப்பெண்களைப் பெறுவோமா, அதன் பிறகு என்ன படிக்கலாம்?’
என்ற ஒருவித கலக்கத்தோடு இருக்கும் மாணவர் களுக்கு ஒரு மிகப்
பெரிய வாய்ப்பு ‘மெர்செண்ட் நேவி கேரியர்’.
இதைப் பற்றி
விளக்குகிறார் ண்ஞி குடடிணீ ச்ணச்ஞ்ஞுட்ஞுணணா ஐணஞீடிச்
கணூடிதிச்ணாஞு ஃடிட்டிணாஞுஞீன் மூலமாக பல இளைஞர்களுக்கு, கப்பல்
சார்ந்த வேலை கள் வழியாக வளமையான எதிர்காலத்தை அமைத்துக்
கொடுத்துக் கொண்டிருக்கும் சுரேஷ்.
+2 வில் கணிதம்,
பிசிக்ஸ் மற்றும் கெமிஸ்ட்ரி பாடத்தைப் பயின்று, பொதுத் தேர்வில்
அறுபது சதவிகிதம் மதிப்பெண் பெற்றவர்கள், இந்நிறுவனம் நடத்தும்
நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளலாம். இனி வரும் ஆண்டுகளில்,
மெர்செண்ட் நேவி துறையில் அநேகருக்கு வேலை வாய்ப்பு உறுதி.
உங்களது பிள்ளைகளை இந்தத் துறையில் சேர்ந்து பயிற்சி எடுத்துக்
கொள்ள தாராளமாக அனுப்புங்கள்" என பரிந் துரைக்கும் சுரேஷ், மே
மாதம் பயிற்சி எடுக்க ஆரம்பிப்பவர்கள் ஜூலை 2011ல் மாதம் ரூபாய்
17,500 ஊக்கத்தொகை பெற்று கொண்டு, டெக் கேடட்டாக கப்பலில் ஜாலி
யாக ஒரு ஜோலியோடு கடல் உலகை வலம் வரலாம். ஒன்பது மாதக்காலம்
கப்பலில் பயிற்சி பெற்ற பின் மூன்று மாத விடுமுறையில் தங்களது
வீடுகளுக்குச் செல்லலாம்" என்கிறார்.
கை நிறைய சம்பளம்,
சவாலான பணி, அழகான, உல்லாசமான கடல் வாழ்க்கை, உலகம் முழுக்கச்
சுற்றும் வாய்ப்பு என ஏகப்பட்ட கவர்ச்சிகரமான அம்சங்கள்
நிறைந்திருப்பதால், இளைஞர்கள் மனம் விரும்பும் வேலையாக கப்பல்
பணி உள்ளதில் ஆச்சரியமென்ன!
- நளினி சம்பத்குமார்