Mangayar Malar
Mar 2010


அறிவிப்புகள்
கருத்துகள்
உங்கள் பகுதி
சமையல்
அழகு
மருத்துவம்
ஆன்மிகம்
திருமண மலர்





Designed & hosted by

 

மாநில அரசு 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக் களுக்கு மாதம் நானூறு ரூபாய் ஓய்வூதியம் அளிக்கிறது. இதைப் பெறுவதற்கு, வருமானத்துக்கு வழி இல்லாத, பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொள்ளாத, 20 வயதுக்கு மேற்பட்ட மகன், பேரன் ஆதரவுக்கு வழி இல்லாதவராக இருக்க வேண்டும். தவிர, ஓய்வூதிய விண்ணப்பதாரருக்கு அதிக பட்சம் ஐந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள கூரை அல்லது ஓட்டு வீடு இருக்கலாம். உடல் ஊனமுற்றவராக இருந்தால், 45 வயதானவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படு கிறது. 60 வயதுக்கு மேற்பட்ட, வசதியற்ற விவசாயக் கூலித் தொழிளாலர்களுக்கும் கூட தமிழக அரசு ஓய்வூதியம் அளிக்கிறது.

ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள், வெள்ளைத்தாளில் மனு எழுதி, மாவட்ட ஆட்சியர் அல்லது வட்டாட்சியருக்கு (சமூகப் பாதுகாப்பு திட்டம்), அனுப்பினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாதாந்திர ஓய்வூதியம் தவிர, தீபாவளி, பொங்கல் சமயத்தில் இலவச வேட்டி அல்லது சேலை. அரசாங்கத்தின் மதிய உணவுத் திட்டத்தில் பயன்பெறுபவர்களுக்கு மாதம் 2 கிலோ, பயன் பெறாதவர்களுக்கு 4 கிலோ என்ற அளவில் அரிசியும் வழங்கப்படும். (முதியோர் பென்ஷன் சம்பந்தமான அரசு உயரதிகாரி

முகவரி : சிறப்பு ஆணையர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர். சேப்பாக்கம், சென்னை 600005; ஃபோன் : 044-2841 4550)

முழுமையாய் வாசித்து மகிழ சந்தா செலுத்தி
கல்கி / மங்கையர் மலர் வாங்குங்கள்.

 
No comments posted.

 

Kalki, Mangayar Malar, Gokulam Tamil, Gokulam English are trademarks of:
Bharathan Publications (P) Limited.
(C) 2010, Bharathan Publication (P) Limited.
All rights reserved.
  Bharathan Publications (P) Limited.
Kalki Buildings
47NP, Jawaharlal Nehru Road, Ekkaduthangal,
Chennai, India, Pin: 600 032.
Phone: 91-44-43438888 
Fax: 91-44-
2225 1021