
உங்கள் வாடிக்கையாளர்களிடமும், வங்கியாளர்களிடமும், இன்ன பிற
சப்ளையர்களிடமும் இயல்பாக இருங்கள். உங்களைப் பற்றி மிகைப்படுத்திச்
சொல்லாதீர்கள்.
உங்கள் வாடிக்கையாளர்களிடமும்,
வங்கியாளர்களிடமும், இன்ன பிற சப்ளையர்களிடமும் இயல்பாக இருங்கள்.
உங்களைப் பற்றி மிகைப்படுத்திச் சொல்லாதீர்கள்.
உங்கள்
வாடிக்கையாளர்களில் யாரையும் சிறியவர் என்று ஒதுக்காதீர்கள். அவரே
நாளைக்கு மிகப் பெரிய நிறுவன அதிபராகி உங்களுக்கு நிறைய வர்த்த கத்தைத்
தரக்கூடும்.
வாடிக்கை யாளர்கள்தான் உங்களது முதலாளி. எனவே அவரை
திருப்திபடுத்த, தேவைக்கு அதிகமாகவே சேவைகளை வழங்குங்கள்.
ஊழியர்கள் அல்லது வாடிக்கையாளர்களது குடும்பத்தில் ஏதேனும் சிரமம்
ஏற்படுகிறபோது, அது உங்கள் தொழிலுக்கு சம்பந்தமே இல்லாவிட்டாலும் கூட,
நேரில் சென்று அவருக்கு முடிந்தவரை உதவுங்கள். அவரது குடும்ப நண்பராக
நீங்கள் மாறி விட்டால், உங்கள் தொழில் சிறக்க அவர் உதவத்
தொடங்கிவிடுவார்.
ஒரு வேளை உங்களால் குறித்த நேரத்துக்குப்
பொருளைப் பட்டுவாடா செய்ய முடியவில்லை என்றாலோ, பணத்தைத் கொடுக்க
முடியவில்லை என்றாலோ உடனே பாதிக்கப்படும் நபரை அழைத்து இந்தத் தகவலைத்
தெரிவித்து வருத்தத்தைப் பதிவு செய்யுங்கள்.
ஒருவேளை ஏதேனும்
ஒரு வாடிக்கையாளர் உங்களை விட்டுப் போனால்கூட, அடுத்த முறை அவரைப்
பார்க்கும் போது தோழமையுடனேயே பழகுங்கள். முடிந்தால் உதவி களையும்
செய்யுங்கள். நாளை மீண்டும் அவர் உங்களுக்கே வாடிக்கையாளராகத் திரும்ப
வரக்கூடும்!
முடிந்தவரை நேரத்தைச் சரியாகக் கடை பிடியுங்கள்.
வாகனம் கிடைக்காமை, போக்கு வரத்து நெரிசல், கடைசி நேரப் பணிகள் என
உங்களைத் தாமதப்படுத்துவதற்கு எனப் பல நிகழ்வுகள் ஏற்படலாம். நீங்கள்
முன் கூட்டிச் செல்வதே சிறந்தது.
நஷ்டமே ஏற்பட்டாலும் பரவா
யில்லை... பொருளின் தரத்தில் எந்தக் குறையும் வைக்காதீர்கள். இன்றைக்கு
ஏற்படுகிற நஷ்டத்தை நாளைக்கு அதே வாடிக்கையாளருடன் மேற்கொள்ளக் கூடிய
மற்றொரு வர்த்தகத்தில் ஈடு செய்து கொள்ளலாம்.
உங்களை விட்டு
விலகிச் செல்கிற வாடிக்கையாளர் களைப் பற்றியும், ஊழியர்களைப் பற்றியும்
பிறரி டம் பாராட்டியே பேசுங்கள். நீங்கள் அவர்களை விமர் சித்தால், அதை
பெரிதாக்குவதற்கு உங்களைச் சுற்றி பெரிய கூட்டமே காத்திருக்கிறது
என்பதை மறக்காதீர்கள்.
