
முதுமை என்பது நோயல்ல. வாழ்வின் ஒரு பகுதி. அனுபவங்களைத் தாங்கி
நிற்கும் பருவம். இப்பருவத்தை, நல்ல முறையில் கடக்க சிறந்த மருத்துவ
அறிவும், முறையான உணவு பழக்க மும்தான் தேவை.
பல மருத்துவ
ஆராய்ச்சிகள் முது மையும், இறப்பும் மனித உடலின் செயல்பாட்டினால்
ஏற்படும் கழிவுப் பொருள் கள், திசுக்களில் தங்குவதன் காரணமே என்று
கூறுகின் றன. உடற்பயிற்சி இல்லாது உடலில் திசுக்களின் எடை குறை யும்.
கொழுப்பின் எடைகூடும். இதன் விளைவாக எலும்புகள் பழுதடைந்து இளமையிலேயே
முதுமையைத் தாவிப் பிடிப்பவர்களே அதிகம். உடற்பயிற்சி என்பது தண்ஞு
டிணா ணிணூ டூணிண்ஞு டிணா தான்.
உடலில் சத்துக் குறைவாய்
உள்ள முதியோர் காணும் பிரச்னைகள் :
பசி, ருசி,
வாசனையின்மை வறண்ட, புண்ணான உதடு, மலச் சிக்கல், வயிற்றுப் போக்கு,
ஆறாத புண், கால் வீக்கம் அதிக எடை (அ) எடை குறைவு, கண் கூசுதல், மன
அழுத்தம் - போன் றவை.
முறையான உணவு
கொழுப்பு குறைந்த பால், கொழுப்பு குறைந்த சீஸ், பழ வகைகள், எளிய காய்
கனிகள் (சிவப்பு, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிறத்தில் உள்ள காய்கறிகள்,
பழங் கள்) உப்பு சேராத கொட்டை வகைகள், கொழுப்புச் சத்து குறைந்த
எண்ணெய் (குறைந்த அளவு), கொழுப்பு நீக்கிய பால்பவுடர் (செலவும் குறைவு,
நீண்ட நாட்களும் வரும்.)
கொழுப்பு நீக்கிய அசைவ உணவு போன்றவற்றை எடுத்துக் கொள்ளவும்.
முறையற்ற உணவு
முழு பால், க்ரீம், சீஸ்,
வெள்ளை சர்க்கரை, டின்னில் உள்ள காய்கனிகள், பழங்கள், உப்பு சேர்த்த
கொட்டை வகைகள், கொழுப்புச் சத்து கூடிய எண் ணெய் வகைகளை முற்றிலும்
தவிர்ப்பது நல்லது.
மேலும் அன்றாடம் அதிக அளவில் மருந்துகள் பயன்படுத்துபவர்கள் முதி
யோர்கள்தான். அதிக மருந்துகள் எடுத்துக் கொள்ளும்போது உடலில்
சத்துக்கள் குறையும் வாய்ப்புள்ளது.
மருந்தும், உணவும்
* நாம் சாப்பிடும் உணவானது, நாம் உட்கொள்ளும்
மருந்தினை ஏற்கும் அளவில் கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம். இதனால்தான்
சில மருந்துகள் உணவுக்கு முன்பு அல்லது பின்பு என
வலியுறுத்தப்படுகின்றன.
* உணவின்
தரமானது, உடலில் மருந்து செயல்படும் முறையில் வித்தியா சங்களை
ஏற்படுத்தலாம்.
* மருந்து பசி, ருசி, இரண்டினையும் பாதிக்கலாம்.
முதுமையில் இரத்த சோகை மிக சாதாரணமாகக் காணப்படும் ஒன்று.
* டீ
அடிக்கடி குடிக்கும் பழக்க மிருப்பின் அதிலுள்ள `டனின்' எனும் பொருள்
உடலில் இரும்புச் சத்து ஏற்பத னைக் குறைக்கும். இது இரத்த சோகைக்கு வழி
வகுக்கும். தனியாய் இருக்கும் முதி யோர் சோர்வின் காரணமாக உணவு சமைக்
காமல் டீ, காபி குடித்து இருப்பர். இது நல்லதல்ல!
* முதியோர்கள்
தினமும் வைட்டமின் பி12 மாத்திரை எடுத்துக் கொள்வதும் அவசியம்.
வைட்டமின் பி6 குறை பாடு, இரத்தக் குழாய் களைப் பாதிக்கின்றன.
வைட்டமின் சி சத்து இரத்த உறைவுகளையும், கொலஸ்ட் ராலையும்
குறைக்கின்றது.
* வைட்டமின் ஈ சத்து காலுக்கு குறைவான இரத்த
ஓட்டத்தினைக் குறைத்து இரத்தம் கெட்டிப்படுவதி னையும் குறைப்பதால்
இருதய நோய்க்கும் நல்ல தீர்வாகின்றது.
ஸ்நாக்ஸ் எனப்படும்
கொரிப்பு வகை களை எடுத்துக்கொள்ளலாம். ஒரு கப் பப்பாளி, கொழுப்பில்லாத
தயிர், ஆரஞ்சு, வாழைப்பழம், திராட்சை, முழு தானிய கோதுமை, பிரெட்,
கொழுப்பு நீக்கிய பாலில் `மில்க் ஷேக்', வெண்ணெய், உப்பு சேராத
பாப்கார்ன், பச்சை காய்கனிகள், நீர்த்த காய்கனி சூப்.
உணவுக்கு
முன் பழ ஜூஸ், காய்கறி உண்பது நல்லது. கலோரி சத்து குறைவான சூப் மிகச்
சிறந் தது. காய்கனிக் கலவை, பழக் கலவை இவற்றில் எலுமிச் சைச் சாறு
அல்லது கொழுப் பில்லாத தயிர் சேர்த்து உண்பது மிகவும் நல்லது. முழு
தானிய பிரெட் நல்ல உணவே. உப்பு, 7 கிராம் முதல் 10 கிராம் வரை
இருந்தாலே போதும். இது அதிக வியர்வை, சீதோஷ்ண நிலை, உடல் நிலை பொறுத்து
சற்று மாறுபடும். ஆனால், அன்றாட உணவில் மிக அதிக உப்பு சேர்ப்பது
நோய்களைத் துரிதப் படுத்தும்.
6 - 9 பல் பூண்டினை அன்றாடம்
உட்கொள்ளும் போது இரத் தம் இளகுவதுடன் கொலஸ்ட்ராலின் அளவும்
குறைகின்றது.
தாவர வகை உணவில் கிடைக்கும் புரதமே உயர்ந்த
தரத்தினைச் சேர்ந்தது. ஐம்பது சதவிகிதம் முதியோர் இருதய சம்பந்தமான
நோயி னால் இறப்பதால் தாவர வகை உணவின் அவசியம் வலியுறுத்தப்படவேண்டும்.
நீங்கள், முதுமையில் ஒரு பயில்வா னாகவோ (அ) மராத்தான் ஓட்டப்பந்தய
வீரராகவோ இருக்க வேண்டுமென் பதில்லை. ஆனால் சீரிய நல்ல உணவு பழக்க
முறைகளும், வாழ்க்கை முறை களும் பெரிய நோய்களிலிருந்து உங் களைக்
காப்பாற்றும் என்பதே உண்மை!
