Mangayar Malar
Sep 2010


அறிவிப்புகள்
கருத்துகள்
உங்கள் பகுதி
சமையல்
அழகு
மருத்துவம்
ஆன்மிகம்
திருமண மலர்





Designed & hosted by

 

ஒவ்வொரு வருடமும் தாய்ப்பால் வாரத்துக்காக ஒரு மையக் கருத்து அறிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் விழிப் புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப் படுகின்றன. ‘தாய்ப்பால் ஊட்ட, பத்து வரைமுறைகள் - குழந்தை நேயமான வழி (Breastfeeding Just 10 Ways- baby friend way ) என்பது இந்த வருடத்தின் கருத்து!
கீழே உள்ள இவை யாவும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருத்துவமனைகள் செயல்படுத்த வேண்டிய வழிமுறைகள். ஒரு சில விதிமுறைகள் மட்டும் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டியவை.
1. ஒவ்வொரு மருத்துவமனைக்கும் பொருந்தக் கூடிய தாய்ப்பால் ஊட்டும் கொள்கை எழுதப்பட்டு, அனைத்துப் பணியாளர்களும் அதைப் புரிந்து கொண்டு செயல்படுத்த வேண்டும்.
2. மருத்துவமனை பணியாளர்கள் யாவருக்கும் தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கத் தேவையான அறிவியல் நுட்பங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
3. மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகள் யாவருக்கும் தாய்ப்பால் அளிப்பதன் நன்மைகளை விளக்க வேண்டும்.
4. குழந்தை பிறந்த அரைமணி நேரத்தில் தாய்ப் பால் ஊட்ட ஆரம்பிக்க, தாய்க்கு உதவ வேண்டும்.
5. தாய்ப்பால் ஊட்டுவதன் நுணுக்கங்களைத் தாய்க்குப் புரிய வைக்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணத்தால் குழந்தையும் தாயும் பிரிந்து இருக்க நேர்ந்தாலும், தாய்ப்பால் தொடர்ந்து சுரப்பதற்கு தாய்க்கு உதவ வேண்டும்.
6. சிசுக்களுக்கு தாய்ப்பால் தவிர வேறு எதுவும் தரக்கூடாது.
7. தாயும் சேயும் இருபத்து மணி நேரமும் ஒன்றாக இருக்க உதவ வேண்டும்.
8. சிசுவுக்குத் தேவைப்படும்போதெல்லாம் தாய்ப்பால் தொடர்ந்து அளிக்க வேண்டும்.
9. ஊட்டி, ரப்பர், பாட்டில் ஏதும் சிசுவுக்குத் தரக்கூடாது.
10. தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு உதவும் குழுக்கள் (support group) மருத்துவ மனையிலும், அவர்கள் இருப்பிடத்துக்கு அருகிலும் ஏற்படுத்தித் தர வேண்டும்.

இந்தப் பத்துக் கட்டளைகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் செயல்படுத்தினால், அவை குழந்தை நேய மருத்துவமனைகளாகத் திகழும்; பாராட்டப்படும். குழந்தைகளின் எதிர்கால நல்வாழ்விற்கு இந்தப் பத்து கட்டளைகளும் சிறந்த வலுவான அடித் தளத்தை ஏற்படுத்தும்.
தாய்ப்பால் என்பது குழந்தையின் வயிற்றுக்கு மட்டும் உணவு அல்ல; வளரத் துடிக்கும் சிசுவின் உணர்வுகளுக்கும் உணவு (emotional food). குழந்தையை மார்போடு அணைத்து, அதன் தலையை வருடித் தாய்ப்பால் ஊட்டும்போது குழந்தைக்குக் கிடைக்கும் பாசம், அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு போன்றவை குழந்தையின் திடமான மனவளர்ச்சிக்கு உதவுகின்றன.
தாய்மார்கள் குழந்தை நேய மருத்துவமனைகளை மட்டுமே நாட வேண்டும்.
தாய்ப்பால் குழந்தைகளின் உரிமை!
அதைத் தருவது அன்னையின் பெருமை!
இதை நிலை நாட்டுவது மருத்துவ உலகின் மாபெரும் கடமை!

 

முழுமையாய் வாசித்து மகிழ சந்தா செலுத்தி
கல்கி / மங்கையர் மலர் வாங்குங்கள்.

 
No comments posted.

 

Kalki, Mangayar Malar, Gokulam Tamil, Gokulam English are trademarks of:
Bharathan Publications (P) Limited.
(C) 2010, Bharathan Publication (P) Limited.
All rights reserved.
  Bharathan Publications (P) Limited.
Kalki Buildings
47NP, Jawaharlal Nehru Road, Ekkaduthangal,
Chennai, India, Pin: 600 032.
Phone: 91-44-43438888 
Fax: 91-44-
2225 1021